தோப்பூர் - அல்லைக்குளம் அணைக்கட்டில் நீர் கசிவு; நிரந்தரத் தீர்வை கோரும் மக்கள்
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள தோப்பூர் - அல்லைக்குளம் அணைக்கட்டின் மேலாக மழைநீர் வான் பாய்ந்து செல்வதுடன், அணைக்கட்டின் ஒரு பகுதியில் நீர் கசிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அல்லைக்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தற்காலிக நடவடிக்கை முன்னெடுப்பு
இந்த நிலையில், அணைக்கட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள நீர் கசிவைக் கட்டுப்படுத்துவதற்காக நீர்ப்பாசனத் திணைக்கள ஊழியர்கள் வியாழக்கிழமை (12.11.2026) காலை மண் மூட்டைகளை இட்டு நிரப்பும் தற்காலிக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக அது உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என தோப்பூர் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பாரிய அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் தோப்பூர் - அல்லைக்குளம் அணைக்கட்டை பாதுகாப்பான முறையில் நிரந்தரமாக புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.



பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri