அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சர்வதேச நீர் மாநாடு (Video)
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சர்வதேச நீர் மாநாடு நிகழ்வை நடத்தியுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (14.12.2023) இரத்மலானையில் அமைந்துள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையம் எனப்படும் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
“நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜீவன் தலைமையில் நடந்துள்ள நிகழ்வு
இந்த நிகழ்வானது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடந்துள்ளது.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, உலக வங்கியின் உலக நாடுகளுக்கான பணிப்பாளர் சரோஜ் குமார் ஜா, அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பொது முகாமையாளர் ருவான் லியனகே, வெளிநாட்டு பிரதிநிதிகள், உலக வங்கியின் அதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் என அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.













முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
