நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை என்பன இந்தக் கோரிக்கையை மக்களிடம் விடுத்துள்ளன.
மேலும் இரண்டு மாதங்களுக்கு இந்த வறட்சி நிலைமை நீடித்தால் சுழற்சி முறையில் நீர் விநியோகம் செய்ய நேரிடும் என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு
நாட்டில் தற்பொழுது அதிக வெப்பநிலையுடனான வானிலை நிலவி வருவதனால் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டுள்ளது.
மின்சாரத்திற்கான கேள்வியும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நெருக்கடி நிலைகளை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
