தேசிய அருங்காட்சியக திணைக்களம் தொடர்பில் வெளியான தகவல்
தேசிய அருங்காட்சியக திணைக்களம் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, தேவைக்கு அதிகமாக ரூ. 42 இலட்சத்திற்கும் மேல் செலவிட்டு டிக்கெட் புத்தகங்களை மொத்தமாக அச்சிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த செலவினத்தை குறித்த அலுவலகம் அநாவசியமான செலவு என சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் (2022, 2023) டிக்கெட் அச்சிடலுக்காக மொத்தம் ரூ. 42,74,259 செலவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு
கோவிட்-19 பரவலுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் இவ்வாறு அச்சிடப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி, தற்போது உள்ள கையிருப்பைப் பயன்படுத்தவும், இனிமேல் புதிய டிக்கெட்டுகளை அச்சிடுவதைத் தவிர்க்கவும் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
அநாவசிய செலவுகளைத் தடுக்க, டிக்கெட்டுகளை வழங்க நவீன தொழில்நுட்ப முறையை உடனடியாக நிறுவ வேண்டும் என கணக்காய்வு திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
