தாஜுதீன் கொலையுடன் ஷிரந்திக்கு இருக்கும் தொடர்பு! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்
இலங்கையின் ரக்பி வீரர் வசீம் தாஜூதின் படுகொலையுடன் தொடர்புடைய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படைக்கிடையில் நடைபெற்ற ரக்பி போட்டியொன்றின்போது ஹெவ்லொக் கழகம் வெற்றிப் பெற்ற சந்தோசத்தில் வசீம் தாஜுதீன், ஷிரந்தி ராஜபக்ச அமர்ந்திருந்த பெவிலியன் பக்கம் சென்று தனது பின்புறத்தைக் காட்டி நையாண்டி செய்துள்ளார் என விசாரணை அதிகாரிகளால் தகவல்கள் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷிரந்தியின் கோபம்....
அப்போது நாட்டின் முதற் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ச அவருடைய சக தோழிகளுடன் பெவிலியனில் அமர்ந்து போட்டியை ரசித்துள்ளார். இதன்போது, பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்துள்ளனர்.
தாஜுதீனின் இந்த நையாண்டி ஷிரந்தி ராஜபக்சவை அதிகமாக பாதித்திருக்க கூடும். ஜனாதிபதியின் பாரியார் என்ற வகையில் அவருக்கு அது பெரும் அவமானமாகவும் இருந்திருக்கலாம். அதன் ஒரு தாக்கம் பழிவாங்கலுக்கு காரணமாக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் ஊகிக்கின்றனர்.
தாஜுதீன் கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் ஷிரந்தி ராஜபக்ச எடுத்ததாக கூறப்படும் 42 தொலைபேசி அழைப்புகளும் இதை ஒரு கோணத்தில் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச ஆகியோர் அடங்கிய ஒரு குழு ஹெவ்லொக் கழகத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தாஜுதீன் மற்றும் ஹெவ்லொக் கழத்தை சேர்ந்த சிலர் அதை கடுமையான எதிர்த்துள்ளனர்.
ஹெவ்லொக் கழக விற்பனை..
ஹெவ்லொக் கழகத்தில் இவர்கள் சிறு குழுவினர் என்றாலும் அந்த கழகத்தில் பெரும் பலத்தைக் கொண்டிருந்தனர். இந்த கொள்வனவில் ஷிரந்தியின் பங்கு அதிகமாக இருந்தமை தொடர்பில் அறிந்து கொண்டிருந்த தாஜுதீன், ஷிரந்தி ராஜபக்சவிடம் கடும் கோபத்திலேயே இருந்துள்ளார்.
அந்த கோபத்தின் வெளிப்பாடே போட்டியில் வெற்றியீட்டியதன் பின்னர் அவர் செய்த நையாண்டி என தெரியவந்துள்ளது.
ஹெவ்லொக் கழகத்தை விற்பது தொடர்பில் கழகத்தின் சிறு குழுவினரான தாஜுதீன் மற்றும் அவருடன் விளையாடிய சக வீரர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
அவர்கள் தான் இந்த கழகத்தின் சிறந்த ரகர் வீரர்கள். அவர்கள் கழத்தில் பெரும் ஆதிகத்தை செலுத்தியுள்ளனர் என விசாரணை அதிகாரிகளால் பல காரணங்கள் கண்டறிப்பட்டிருந்தாலும் சாட்சியங்களே அதன் உண்மை தன்மையை தீர்மானிக்கும் எனவும் கூறுகின்றனர்.





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
