ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு! வெளியான அதிரடி அறிவிப்பு
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் எல்லைப் பாதைகளை மூடியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும்,எல்லை மூடல் குறித்து காபூலில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் இல்லை. இந்த நிலையில் குறித்த சண்டையில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாக, ஆப்கானிஸ்தான் படையினர் கூறியுள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள்
முன்னதாக, நேற்று சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இது வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, இந்த தாக்குதல் நடந்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் இதன்போது, துப்பாக்கி மற்றும் எறிகனை தாக்குதல்கள் மூலம் பதிலளித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சண்டையில், 20 ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பெரும்பாலும் துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுடன் 2,600 கிமீ (1,600 மைல்) நீள எல்லையைக் கொண்டுள்ளது.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
