பிமலின் தந்தை ராஜபக்சர்களுடன் இருப்பதாக தகவல்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தந்தை மொட்டுக்கட்சியை சேர்ந்தவர் எனவும் அவர் ராஜபக்சர்களின் வீட்டில் இருக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
நான் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பேசுவதை நன்றாக கேட்டேன். அவர் தொடர்பில் தீர்மானம் எடுப்பது தானும்,தனது தந்தை,தாய் மற்றும் மனைவி மட்டுமே என தெரிவித்துள்ளார்.
JVP-JVP பிரிவினை
அப்படியென்றால் அவரது தந்தை ராஜபக்சர்களின் வீட்டில் இருப்பதால், பிமல் ரத்நாயக்கவின் சரி,பிழைகளை தீர்மானிப்பது அவருக்கு வாக்களித்த ஜே.வி.பியினர் அல்ல ராஜபக்சர்கள் என சொல்லுகின்றார்.
அரசாங்கத்தில் NPP-JVP பிரிவினை காணப்படுவதாகவே எமக்கு தோன்றியது. ஆனால் இப்போது பார்க்கும் போது JVP-JVP பிரிவினை ஆரம்பித்துவிட்டதாகவே தெளிவாகிறது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
