யாழில் சதோச நிலையங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர்
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையங்களுக்கு நேரில் சென்று அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.
இதன்போது, விற்பனை நிலையங்களில் நிலவும் பொருட்களின் இருப்பு, பொருட்களுக்கான தட்டுப்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் தேவைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம்
மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள், தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டார்.

மக்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விற்பனை நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.
இந்த விஜயத்தின்போது அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமா? தீபாவளிக்கு முன்பு இந்த பொருளை தூக்கி போட்டுருங்க Manithan