இலங்கையை வட்டமிடும் போர்க்கப்பல்கள்! - ஆட்டம் காணுமா வல்லரசுகள்

Srilanka Government Colombo Galle
By Kanamirtha Oct 26, 2021 09:48 PM GMT
Report

பிரித்தானிய மற்றும் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளன. இதன்படி பிரித்தானியக் கடற்படைக்குச் சொந்தமான கென்ட் என்ற போர்க் கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

133 மீற்றர் நீளமும் 16 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 02 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ஷாதுல் மற்றும் மாகர் என்ற குறித்த கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் போர்க் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் தரித்துள்ளதாகச் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


அத்துடன் இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 கப்பல்கள் கடந்த 24 ஆம் திகதி முற்பகல் இலங்கையை வந்தடைந்தன.

இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் முதல் பயிற்சி படையணியின் குறித்த 6 இந்தியக் கப்பல்களும் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்த கப்பல்களின் விஜயமானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் பஞ்சம் ஏற்படும் எனவும், அரசாங்கத்தினால் டொலர்களை வழங்க முடியாவிட்டால் மின்சாரம் மற்றும் எரிபொருளில் கூட வெட்டுக்கள் ஏற்படும் எனவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் போதே தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலுக்குப் பின்னால் ஒரு அரசு அதிகாரியின் உறவினர் இருக்கிறார்.

சீனாவிலிருந்து கரிம உரமாக இறக்குமதி செய்யப்பட்ட உரக்கப்பல் நாட்டுக்கு மிகவும் பாதகமானது என்பதை இந்நாட்டு ஆய்வுக்கூடங்கள் நிரூபித்திருந்த போதிலும் மீண்டும் வலுக்கட்டாயமாக அந்த உரக்கப்பலை இறக்க வருகின்றனர்.

இந்த மோசடிக்காரர்களின் விளையாட்டு வெள்ளைப் பூண்டிலிருந்து சீனி ஊசி வரை இயங்கும் மோசடி கொள்கையாகும். குப்பை மற்றும் மலம் ஆகியவற்றிலிருந்து இந்த உரம் செய்யப்படுகிறது. இதற்கு எதிராக முழு நாடும் கிளர்ந்தெழ வேண்டும்.

இந்த கப்பல் உரத்தை இறக்குமதி செய்ய முனையும் ஒப்பந்ததாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப்போது இந்த நாடகம் போதும். தொற்றுநோய் நாட்டிற்கு உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்யும் மோசடியாக மாற்றப்பட்டது.

எமது நாட்டின் பயிர் மண்ணை அழிக்கும் உர இறக்குமதிக்கு எதிராக இந்நாட்டு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். கரிம உரத் திட்டம் என்று அழைக்கப்படுவதால் விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது. தவறான உணவு கொள்கை மற்றும் மோசடி கொள்கை இதற்குப் பங்களித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு காரணமாக தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த நாடாவதற்காக தெற்காசியாவிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பைச் சீனா மேற்கொண்டு வருகிறது. புவி அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான உத்திகளிலும் சீனாவின் போட்டியைக் காண முடிகிறது.

அண்மைக்காலங்களில் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் சீனாவின் இராணுவ உதவியை அதிகம் பெற்றுள்ளன. நேபாளம், இலங்கை, மாலைத்தீவிலும் குறிப்பிடத்தக்க அளவில் சீனா முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நாடுகளுக்குச் சீனா புரியும் உதவிகள் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சி. இதனால் தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து நிலவுகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அயல் நாடுகளுடனான உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.

அயல் நாடுகளுடனான பண்பாட்டு பிணைப்புக்களை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்தியா அயல் நாடுகளின் நண்பன் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US