டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலை மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணை
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனினும் டக்ளஸ் தேவானந்தாவின் சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு மேலதிக நீதவான் விசாரணையை ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan