லண்டனில் இருந்து வருகைத்தந்த பெண் வவுனியாவில் கைது
லண்டனில்(London) இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து சமூக வலைத்தளம் மூலம் நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் வசித்து வரும் குறித்த பெண், வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வருகைத்தந்து தற்போது அங்கு குடியிருக்கும் நபர் ஒருவர் தனது வாகனத்தை தரவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இதன் காரணமாக அவர், காரை வைத்திருக்கும் நபருக்கு எதிராக தொடர்ச்சியாக டிக்டொக் சமூக ஊடகத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார்.

பெண்ணால் குற்றம் சுமத்தப்பட்ட நபர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் அவர், பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி மேலதிக விசாரணைகளை தொடர்ந்து அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri