தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்
சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
சமூகவலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,''எவராலும் தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியை தன்னால் தீர்க்க முடிந்தாலும், சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

சில கட்சிகள் உள்ளூர் பொருளாதாரம் பற்றி பேசுகின்றன நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிதாக சிந்தித்து கட்சி பேதமின்றி புதிய வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும்.
அதற்காக ஒரு பெரும் குழு என்னுடன் இருக்கின்றனர். அதனால் தான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளேன்.
நாட்டின் அபிவிருத்தி
கடந்த 75 வருட கால ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக எதனையும் செய்யவில்லை என சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். அது சரியல்ல.

இருப்பினும் நாடு, கடந்த 75 வருடங்களாக முன்னெடுத்துச் சென்ற சித்தாந்தங்கள் காரணமாகவே நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியவில்லை.
எனவே இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.'' என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri