அடுத்து சிக்கப் போகும் ராஜபக்சக்களின் சகா.. தப்பிக்க முடியாமல் திணறும் முந்தைய அரச பினாமிகள்
தற்போது இடம்பெற்று வரும் முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் முந்தைய ஆட்சியில் இருந்த பல அரசியல் பிரமுகர்களின் உண்மை முகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில், நடந்த பல குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
சொல்லப் போனால், தற்போதைய அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் இந்த கைதுகளையும் வழக்குகளையும் நடைமுறைப்படுத்துவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், புலனாய்வாளர்கள் முக்கிய ஆதாரங்களை வெளிக் கொணரும் வண்ணம் தான் உள்ளனர்.
இந்நிலையில், முந்தைய அரசாங்கங்களின் ஆட்சியின் போது, கடற்படை தளபதியாக இருந்த வசந்த கரன்னாகொட தொடர்பிலும் மற்றுமொரு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,