யாழில் பரபரப்புச் சம்பவம்.. தாயையும் மகளையும் கத்தியால் குத்திவிட்டு தொடருந்தின் முன் பாய்ந்த நபர்
யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ். கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைந்த இளைஞர் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
உயிர்மாய்க்க முயற்சி
அதேவேளை, பெண்ணின் தாயார் மீதும் இளைஞர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில், தாயார் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.