தாக்கங்களை புரிந்துகொள்ளவில்லை! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிஉயர் எச்சரிக்கை நிலை
கோவிட் தொற்று சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாகவே தொடர்ந்து நீடிப்பதாக என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிட் தொடர்பான சிக்கல்கள் அதன் தாக்கங்கள் முழுமையாக புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதாகவும்,உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசர குழு தெரிவித்துள்ளது.

உயர்ந்த எச்சரிக்கை நிலை
சீனாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கிய நிலையில், உலகில் பலி எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கோவிட் தொற்று நோய் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகவே நீடிக்கின்றது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஏனைய சுவாச வைரஸ்களுடன் ஒப்பிடும்போது கோவிட் இறப்புகள் அதிகமாக உள்ளதாகவும்,இவை உயர்ந்த எச்சரிக்கை நிலையை வெளிப்படுத்துவதாகவும் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசர குழு தெரிவித்துள்ளது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan