சமூக வலைதளங்கள் ஊடாக பல மில்லியன் ரூபாய் மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை
சமூக வலைதளங்கள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண மோசடி

குறித்த சந்தேக நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசில்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக 11,627,175 ரூபாவை தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளார்.
இதன்படி, பணமோசடி சட்டம், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஹிம்புட்டானா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களுக்கு எச்சரிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam