இந்தியா - கனடா இடையே மீண்டும் பிளவு: 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்ப உத்தரவு
இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையில் வெளியுறவு தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கனடா இந்தியாவிற்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆலோசனையில் கனடா தனது தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்
காலிஸ்தான் பிரிவனைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டியமையினால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.
மேலும், மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களில் வாழும் கனடிய மக்களை கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளது.