பலத்த மின்னல் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு
பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், அத்துடன் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
எச்சரிக்கை
இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று(18.9.2026) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

இடியுடன் கூடிய மழையின் போது, அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.