அவதானத்துடன் செயற்படவும்..! அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரங்களை கருத்திற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
24 மணி நேரத்திற்கு எச்சரிக்கை
இந்த எச்சரிக்கை இன்று (15) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளதுடன் நாளை (16) காலை 10.30 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் இருக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக கல்பிட்டிய முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.