நாடு முழுவதும் பலத்த காற்று ! பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று
அதேபோல், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.