ஹோர்டன் சமவெளிக்கு வருவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஹோர்டன் சமவெளியில் சட்டவிரோத செயல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் அரிய 'நெலு' மலரைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து வரும் நிலையில், பலர் பூங்கா விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் குற்றம் சுமதியுள்ளனர்.
சுமார் 50 பேருக்கு அபராதம்
இந்த நிலையில், பூங்கா விதிகளை மீறுபவர்கள், ஒதுக்க்கப்பட்ட பாதைகளில் இருந்து விலகிச் செல்வவர்கள் அல்லது பூங்காவின் தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பூங்காவின் கண்காணிப்பாளர் சிசிர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு தேசிய பூங்காவில், பார்வையாளர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பார்வையிட மாத்திரமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பாதையை விட்டு வெளியேறுதல், பூக்களைப் பறித்தல் அல்லது விலங்குகளுக்கு உணவளித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என சிசிர ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும், சுமார் 50 பேருக்கு அபராதம் விதித்துள்ளதாக சிசிர ரத்நாயக்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
