தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் இன்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்ததன் பின்னர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நாட்டில் 122000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி வீடுகளை விட்டு வெளியேறுவோர் மற்றும் வீடுகளுக்கு வெளிநபர்களை அழைத்து வருவோர் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை உச்ச அளவில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam