காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று(14.04.2024) வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையுமென எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இந்தநிலையில் வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு தொடர்பில் வளிமண்டலத்திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |