மத்திய வங்கியின் எச்சரிக்கை! கேள்விக்குறியாகும் உள்ளூர் வங்கிகளின் எதிர்காலம்(Video)
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் ஒத்துழைப்பை வழங்காவிடின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளூர் வங்கிகள் முகம் கொடுக்க நேரிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "இலங்கையில் உள்ள வங்கிகள் அனைத்தும் மத்திய வங்கியுடன் இணைந்த ஒத்துழைப்பை வழங்காவிட்டால் நாம் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்கு செல்வோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்டத்தில் குறிப்பாக வங்கிகளும் அதன் வைப்புக்களும் உள்ளடக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய வங்கியின் குறுங்கால கடன்களை நீண்டகால கடன்களாக மாற்றியதன் விளைவாக அதன் சொத்துக்கள் அனைத்தும் பாதகமான ஒரு நிலையை அடைந்துள்ளது.
இதன் விளைவாக உலகநாடுகளில் இலங்கை அரசு வாங்கும் கடன்களுக்கு உத்தரவாதம் வழங்க கூடிய நிலையை மத்தியவங்கி தற்போது இழந்துவிட்டது." என தெரிவித்துள்ளார்.