இலங்கையில் பாரிய அரிசி தட்டுப்பாடு தொடர்பில் எச்சரிக்கை
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசி தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் வாய்ப்புகள் உள்ளதென அரசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரிசி மீது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கும் விதிக்கப்படும் அபராதத்தை 100,000 ரூபாயாக அதிகரித்தால், அரிசி விற்பனையிலிருந்து விலகுவதாக மற்றொரு வர்த்தகர்கள் குழு தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிக விலைக்கு அரிசி விற்கப்படுவதால் நுகர்வோர் விவகார ஆணையம் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து 2 ஆம் திகதி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய், ஒரு கிலோ சம்பா அரிசி 103 ரூபாய் மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா 125 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this video...
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri