மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லக்ஷ்மன் நிபுண ஆரச்சி ஆகியோருடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மாகாணசபை தேர்தல்
இதன்போது, தேர்தல் பிரச்சார நிதிச் சட்டங்கள், பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் அரசியல் பங்கேற்பு, முன்கூட்டிய வாக்களிப்பு, விசேட வாக்களிப்பு, வெளிநாடுகளில் வசிப்போருக்கான வாக்களிப்பு, தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் செயல்திறன், அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பல முக்கியமானதும் பெறுமதியானதுமான விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான கலந்துரையாடலாக இது அமைந்தது.