மின்னல் தாக்கி மாணவன் பரிதாப மரணம்!
களுத்துறை- அகலவத்தை பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (20.9.2026) இடம்பெற்றுள்ளது.
அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட முகவரியில் வசிப்பவரும், அகலவத்தை மிஹிந்து மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்பவருமான15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
மேற்படி மாணவன் நேற்று(20) வீட்டு அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் பாய்ந்த மின்னல் தாக்குதல் அந்த மாணவனையும் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.