இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செற்படுத்தத் தவறும் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இந்த அறிவுறுத்தல், அமைச்சுத் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ், ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளை அரச நிறுவனங்கள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் செயற்படுத்தி அதற்கான தகவல்களை வழங்க வேண்டியது சட்டப்பூர்வ கட்டாயமாக கருதப்படுகிறது.
கடுமையான நடவடிக்கைகள்
ஆனால், சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், பரிந்துரைகளை புறக்கணிப்பதை ஆணைக்குழு கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த நிலையில், தமது பரிந்துரைகளை மீறி செயற்படும் அதிகாரிகளும் நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

முத்தக் காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன்.. நிச்சயத்துக்கு பின் விஷால் எடுத்த அதிர்ச்சி முடிவு Cineulagam
