திருகோணமலை மக்களுக்கான எச்சரிக்கை
திருகோணமலை நகரில் தேவையற்ற விதத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்றைய தினம் தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யாமல் நகர் பகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சோதனைச் சாவடிகளின் ஊடாக பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது கோவிட் 19 தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமெனவும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு வீடுகளில் இருக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
