மக்களே அவதானம்! அதிகாலையில் வெளியாகியுள்ள வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை
குறித்த பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
உலகத்தைக் காப்பாற்ற புகைப்படங்களை டெலீட் செய்யுங்கள்: சுவிட்சர்லாந்தின் வித்தியாசமான கோரிக்கை News Lankasri