கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் வாழும் மக்களுக்கு விசேட அறிவித்தல்
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தை அண்மித்த குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஹோமாகம பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறு

தொழிற்சாலையின் இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைப்பதற்காகவே இந்த விசேட கோரிக்கையை அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்வைத்துள்ளது.
ஹோமாக தொழிற்சாலையில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோட்டை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் ஹொரணை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam