நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் சுமார் 10,000பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள்
இந்நிலையில், ஆண்டுதோறும் எலிக்காய்ச்சலால் 120 முதல் 200 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வகை தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் உடலில் படும்போதும், பக்டீரியா கிருமிகள் கலந்த தண்ணீரைக் குடிப்பதாலும் எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குளிர்க்காய்ச்சல், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றன.
இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
