நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை
இந்தநிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு, வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 20இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |