பொதுமக்கள் நெருங்க வேண்டாம்! லண்டனில் சுற்றித்திரியும் ஆபத்தான தமிழர் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை
கிழக்கு லண்டனில் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படும் தமிழர் தொடர்பில் மாநகர பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபடக்கூடிய ஆபத்தான இந்த நபர் தபோது காப்பகம் ஒன்றில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலசங்கர் நாராயணன் என்ற 43 வயதுடைய குறித்த நபர் செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஆபத்தானவர் என்றும், பொதுமக்கள் அவரை நெருங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இவர் கடைசியாக வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் சட்டையுடன் கருப்பு டிராக்சூட் கால்சட்டையும் கருப்பு பேஸ்பால் தொப்பியும் அணிந்து காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதியிலும் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் பாலசங்கர் நாராயணன் காணப்பட வாய்ப்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டன் தொடருந்துகளில் இவர் பயணிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸார், பொதுமக்களுக்கும் தொடருந்து ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக தகவல் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri