வலி. வடக்கில் இராணுவ பங்களா முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள்
இந்த போராட்டம் நேற்று (01.05.2026) இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள்
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும், யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத காரணத்தால் இப்பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.
இதனையடுத்து, தமது காணிகளை விடுவிக்கக்கோரி பல வருடங்களாகப் போராடி வரும் உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது போராட்ட இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராட்டத்துக்குத் தனது பூரண ஆதரவைத் தெரிவித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதியுடன் நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
திறைசேரி செயலாளர் பதவி நீக்கப்படுகிறாரா: ஜனாதிபதி அநுரவிற்கும் சிக்கல் - அவரின் பதவியும் பறிபோகுமா..!
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri