முல்லைத்தீவில் பரவலாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள்
சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த கோரி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த துண்டுப்பிரசுரங்களில் மீன்பிடியில் தடை செய்யப்பட்ட முறைகள் - சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்து என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லைட்கோஸ், லைலா, சுருக்குவலை, டைனமைட் பயன்படுத்தி மீன்பிடித்தல், தங்கூசிவலை, இழுவைமடி வலை மற்றும் சட்டத்தின் பயன்படுத்தப்படாத கோஸ்வலை உள்ளடங்கலாக மீனவ கட்டளைச் சட்டங்களில் தடைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குப்படுத்தலுக்கு உள்ளான மீன்பிடிமுறைகள் மீனவ மற்றும் இயற்கை வளங்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா? இருப்பினும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
1996 இலக்கம் 2 சட்டத்தின்படி தற்போது இருக்கும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்போம், மீனவ கொள்கை ஒன்றினை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி நீரியல் வளங்களை பாதுகாப்போம் என்றும் அந்த சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் குறித்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
