மகிந்தவின் வீட்டை கையகப்படுத்த கடும் பிரயத்தனம் - போட்டிபோடும் இருவர்
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வீட்டை கையகப்படுத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அரசாங்கம் அதை கையகப்படுத்துவதை தாமதப்படுத்தி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொருட்களை வீட்டை அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் பலமுறை மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மகிந்த தரப்பு
எனினும், வீட்டிலுள்ள பொருட்களின் பட்டியலை ஆராய்ந்து அவற்றை அகற்றிய பின்னர், அரசாங்கம் அவரது பொருட்களை அகற்றும் என முன்னாள் மகிந்த கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை மகிந்த தரப்பு எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டுக்கள் வருவதை தவிர்க்கும் நோக்கில் மகிந்த இவ்வாறு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பிரதமர் அலுவலகம்
எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதலில் தனது உடைமைகளை அகற்ற வேண்டும் என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜேராம மாவத்தை இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான பொருட்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
