மகிந்த விவகாரத்தில் இழுபறி.. அரசாங்கத்துடன் தொடர் முரண்நிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த உத்தியோகபூர்வ இல்லத்தை கையகப்படுத்துவதில் அரசுக்கும் மகிந்த தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இழுபறி காரணமாக, அரசாங்கம் அதை கையகப்படுத்துவதை தாமதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொருட்களை குறித்த இல்லத்திலிருந்து அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், அங்கு உள்ள பொருட்களின் பட்டியலை ஆராய்ந்து அரச பொருட்களை அகற்றிய பின்னர் தங்களுடையவற்றை அகற்றுவோம் என்று மகிந்த தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மகிந்தவின் முடிவு..
அரசாங்க உடைமைகளை முதலில் அகற்றினால், அவர் அரசாங்க உடைமைகளை எடுத்துச் சென்றதாக எந்தவொரு குற்றச்சாட்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுக்கும் நடவடிக்கையாக முன்னாள் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த முதலில் தனது உடைமைகளை அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், விஜேராம மாவத்தை இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்திற்கு சொந்தமான பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



