மகிந்த ராஜபக்சவிற்கு தொடரும் சிக்கல் : அரச தரப்பிலிருந்து கடும் அழுத்தம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனமும் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு தற்போது ஒரு வாகனம் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிந்த ராஜபக்சவின் பாவனைக்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்கள் கையளிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், குறித்த வாகனங்கள் நேற்று உத்தியோகபுர்வமாக கையளிக்கப்பட்டுள்ள தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் ஏனைய அனைத்து சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கும்
இதேபோல், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியின் ஓய்வூதியமும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய அனைத்து சலுகைகளும் இழக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள அரச பங்களாவிலிருந்து தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



