முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்: தீர்மானத்தை அறிவித்த பிரதமர் (Live)
கடன் தொகை தள்ளுபடி தொடர்பிலான அறிவிப்பொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து வழங்கியுள்ளார்.
கடன் தள்ளுபடி
அதன்படி இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைநிரப்பு பிரேரணை
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் இன்றைய தினம் முன்வைத்துள்ளார்.
695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை இவ்வாறு பிரதமரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த கடன் தொகை தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்! பிறப்பிக்கப்பட்டது விசேட கட்டளை (Live) |
அடுத்த மூன்று வாரங்களுக்கு நாட்டில் சவால் நிலை! தயாராகுமாறு பிரதமர் கோரிக்கை (Live) |
பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா..! நாடாளுமன்றில் கேள்வி! |