பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா..! நாடாளுமன்றில் கேள்வி!
அரசாங்கத்தில் மோசடிக்காரர்
மோசடி மற்றும் கொள்ளை என்பவற்றை இல்லாதொழிக்கவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கும் நிலையில், அரசாங்க கட்சியின் பிரதம அமைப்பாளருக்கு நேற்று நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்கட்சி இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்றில் ஆற்றிய சிறப்புரையின்போது, எரிபொருள், எரிவாயு மற்றும் உணவு பற்றாக்குறைகளுக்கு மத்தியில், நாட்டில் மோசடி, கொள்ளைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
அரசாங்கத்திடம் இருந்து பதில் இல்லை
இந்தநிலையில் அவரின் உரைக்கு பின்னர், கேள்வி எழுப்பிய எதிர்கட்சியின் சமிந்த விஜயசிறி, மோசடி மற்றும் கொள்ளைக்கு எதிரான பிரதமரின் கருத்துக்களுக்கு மத்தியில் அவரின் இடது புறத்தில் அமர்ந்துள்ள அரசாங்கக் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.
மோசடி குற்றச்சாட்டுக்காக பிரசன்ன ரணதுங்கவுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவருக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எனினும் அரசாங்கத்தரப்பில் இருந்து இந்த கேள்விக்கு பதில் எதுவும் வழங்கப்படவில்லை.