வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது பிரித்தானியா
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்து உத்தியோகப்பூர்வமாக தடை செய்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 6 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022ல் ரஷ்ய சிறைக் கைதிகளை தமது குழுவில் இணைத்துக்கொண்ட பிரிகோஜின் 25,000 பேரை உறுப்பினர்களாக குறிப்பிட்டிருந்தார்.
வாக்னர் கூலிப்படையின் தீவிரவாத பட்டியல்
இந்நிலையில் ரஷ்யாவின் விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் நிச்சயமற்றதாக கருதப்பட்டது.
இதற்கமைய, 2023 ஜனவரில் வாக்னர் கூலிப்படையை நாடு கடந்த குற்றவியல் அமைப்பு என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய நாடுகள் பல வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
