வாக்னர் கூலிப்படையை பொறுப்பேற்கும் புதிய தலைவர்! ரஷ்ய அதிகாரியின் இரகசிய திட்டத்தினால் வெடித்தது சர்ச்சை
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர் கொண்ட குழு விமான விபத்தில் சிக்கி பலியான நிலையில் விபத்து தொடர்பில் பல்வேறு கருத்துகள் கசிந்துள்ளது.
லிபியாவில் களமிறக்கப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படை
ரஷ்ய இராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அந்த விமானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறி பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விமான விபத்தில் எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்படுவதற்கு முதல் நாள் லிபியா சென்ற ரஷ்ய அதிகாரி ஒருவர், இனி வாக்னர் கூலிப்படை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செயற்படும் எனவும், அவர்கள் தொடர்ந்து லிபியாவில் சேவையாற்றுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், லிபியாவில் களமிறக்கப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படையினர் புதிய தளபதியிடம் இனி தகவல் பரிமாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |