அமெரிக்காவில் தரையிறங்கிய உக்ரேனிய விமானம்.. வெளியான காணொளி
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் தனது விமானத்திலிருந்து தரையிறங்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பை சந்திப்பதற்காக சென்றுள்ள ஜெலென்ஸ்கி, அமெரிக்கா சென்றடைந்து விட்டதாக காணொளி பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் இட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர், "இன்று, நான் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளேன். நமது பாதுகாப்பை நிச்சயமாக வலுப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவை.
ட்ரம்புடன் சந்திப்பு
குறிப்பாக, வான் பாதுகாப்பு அமைப்புகளின் கூடுதல் விநியோகங்கள் குறித்து விவாதிப்போம். இன்று அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்திப்பேன்.
Already in Washington.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) October 16, 2025
Today, I am having meetings with representatives of defense companies – producers of powerful weapons that can definitely strengthen our protection. In particular, we will discuss additional supplies of air defense systems. I will also meet today with… pic.twitter.com/MRFmPARkq1
இப்போது, ரஷ்யா நமது எரிசக்தி துறைக்கு எதிராக பயங்கரவாதத்தை பந்தயம் கட்டி, தினசரி தாக்குதல்களை நடத்தி வருவதால், உக்ரைனின் மீள்தன்மையை உறுதி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாளை, ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது மிக மோசமான தாக்குதல்களை நடத்தியுள்ளமை போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு பெரும் சவாலாக அமையும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
