பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நடந்த கொடூரம்..
பிரித்தானியாவின் வேல்ஸின் கார்டிஃப் பல்கலைக்கழக ஆண்கள் கிரிக்கெட் சங்கம் மனித சித்திரவதை காரணமாக, காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேல்ஸில் அமைந்துள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கு கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பகிடிவதை
பல்கலைக்கழகத்தின் ஆண்கள் கிரிக்கெட் சங்கம், புதிய மாணவர்களின் தலைகளை கழிப்பறை கிண்ணங்களில் திணித்ததாகவும், ஈரமான சாக்ஸ் மற்ற மாணவர்களின் வாய்களில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பச்சை வெங்காயத்தை சாப்பிட வற்புறுத்தியதாகவும், பச்சை வெங்காயம் மற்றும் ஆல்கஹால் கலவையை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பல்கலைக்கழக விளையாட்டு சங்கம், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதப
அது மாத்திரமன்றி, இவ்விடயம் தொடர்பில் எவ்வித ஆதராங்களும் இல்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



