ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தும் விமல் வீரவன்ச
விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தவர்களுடனேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருவதற்கான பாதையை தற்போதைய அரசாங்கமே உருவாக்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் போன்று உயரதிகாரிகள் இலங்கைக்கு வருவது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்னெடுப்பதற்காகும்.
இவ்வாறான விடயங்கள் எதிர்க்கப்பட வேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெற்கில் எதையும் பேசவில்லை மாறாக யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்கு இறந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு-கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! குற்றஞ்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர்
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri