வடக்கு-கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! குற்றஞ்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர்

TNA Eastern Province Northern Province of Sri Lanka
By Mubarak Jun 27, 2025 01:16 PM GMT
Report

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடுகின்றது எனவே வாக்களித்த மக்கள் சிந்தியுங்கள் என்று நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சகிதம் ஊடகங்களுக்கு நேற்றையதினம்(26) இரவு அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் கருத்து வெளியிட்ட போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியை அதிர வைத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

செம்மணியை அதிர வைத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு-கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! குற்றஞ்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர் | Tna In Deal Politics Inpoli North East Sri Lanka

நள்ளிரவில் இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களது தரப்பினரை அழைக்கிறார்கள்.

அங்கு வாருங்கள் பேசுவோம் இங்கு வாருங்கள் பேசுவோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். நிறைய அன்பளிப்புகள் எல்லாம் வழங்குகின்றார்கள்.

மக்களின் வாக்கு பிச்சைகளை எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு இவ்வாறாக செயற்படுகின்றார்கள்.

அண்மையில் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து எனது தலைமையிலான சுயேட்சைக் குழு கால்பந்து சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனமுமாக மொத்தமாக நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் முஸ்லிம்கள் சார்பில் தெரிவாகியிருந்தனர்.

ஈரான் தலைவர் அலி கமேனியை கொலை செய்ய திட்டம்! ஒத்துக்கொண்ட இஸ்ரேல் தரப்பு

ஈரான் தலைவர் அலி கமேனியை கொலை செய்ய திட்டம்! ஒத்துக்கொண்ட இஸ்ரேல் தரப்பு

வரலாற்று துரோகம்

இந்நிலையில் சிற்றூர்களுக்காக பெரிய ஊர்களை காவு கொடுக்க முடியாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாகீர் என்பவர் இவ்வாறு கூறி எங்களின் ஊருக்கு அநியாயம் செய்துள்ளார். இது வரலாற்று துரோகமாகும்.

வடக்கு-கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! குற்றஞ்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர் | Tna In Deal Politics Inpoli North East Sri Lanka

இந்த துரோகத்தை வரலாற்றில் எப்போதும் மன்னிக்க முடியாது.இந்த செயற்பாடு தமிழ் தேசிய கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடுகின்றது.

எனவே வாக்களித்த மக்கள் சிந்தியுங்கள். நள்ளிரவில் இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களது தரப்பினரை அழைக்கிறார்கள். அங்கு வாருங்கள் பேசுவோம் இங்கு வாருங்கள் பேசுவோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். நிறைய அன்பளிப்புகள் எல்லாம் வழங்குகின்றார்கள்.

மக்களின் வாக்கு பிச்சைகளை எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு இவ்வாறாக செயற்படுகின்றார்கள். மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுங்கள்.

நான் நினைத்திருந்தால் பணம் பெற்றுக் கொண்டு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் எதிராக வாக்களித்திருக்கலாம் எனக்கு அவ்வாறான பணம் தேவையில்லை இவ்வாறு பணத்துக்கு சோரம் போகின்ற ஏனைய உறுப்பினர்களுக்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தற்போதைய அரசாங்கம்

அதாவது உங்களது வாக்கின் ஊடாக அந்த பாடத்தினை அவர்களுக்கு மக்கள் கற்பிக்க வேண்டும்.மேலும் நாவிதன்வெளி பிரதேசம் ஒரு பின்தங்கிய கிராமமாகும். தற்போதைய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் அண்ணாமலை பகுதியைச் சேர்ந்த நிரோஷன் என்பவர் தெரிவாகியிருந்தார்.

வடக்கு-கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! குற்றஞ்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர் | Tna In Deal Politics Inpoli North East Sri Lanka

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தியில் இணைந்து கொள்வதற்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட நிரோஷன் என்பவரை தவிசாளர் ஆக்கி கொள்வதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

அது மாத்திரமல்ல உப தவிசாளர் பதவியினை முஸ்லிம் பெற்றுக் கொள்வதுடன் இந்த நாவிதன்வெளி பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தோம்.எமது பிரதேசத்தில் தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்கள் கத்தோலிக்கர்கள் என பல மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாற நான்கு சமூகங்களையும் கொண்ட அமைந்துதான் இந்த நாவிதன்வெளி பிரதேச சபை ஆகும்.இவ்வாறான நிலையில் நாங்கள் ஏனைய சகோதரர்களுடன் இணைந்து ஐந்து வாக்குகளை பெற்று கொடுத்து அரசாங்கம் சார்பான தவிசாளர் ஒருவரை பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தோம்.

கட்சியின் முக்கியஸ்தர்கள்

எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இருவரும் எமது முன்னெடுப்பிற்கு துரோகங்களை செய்து விட்டார்கள்.

வடக்கு-கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! குற்றஞ்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர் | Tna In Deal Politics Inpoli North East Sri Lanka

அவர்களின் தலைமைகளான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் உட்பட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாஹிர் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கியஸ்தர்களும் இவ்வாறு துரோகங்களை மேற்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு துரோகங்கள் இடம் பெறாமல் அரசாங்கம் சார்பாக தவிசாளர் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தால் இந்த பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகள் இடம் பெற்றிருக்கலாம்.

ஆனால் இவ்விரு முஸ்லிம் தேசிய கட்சிகளும் நடந்துகொண்ட முறையினால் அபிவிருத்தியும் இல்லை உப தவிசாளர் பதவி எந்தவொரு முஸ்லிம் உறுப்பினருக்கும் இல்லை என்பதை இவ்விடத்தில் கூற முடியும்.

இதனை அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் இலங்கையின் சில பகுதிகளில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தடன் இணைந்து இவ்விரு முஸ்லிம் தேசிய கட்சிகளும் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் பதவிக்காக கூட்டணி அமைத்த ஆட்சிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாக்குறுதிகள்

ஆனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தவிசாளர் உப தவிசாளர் தெரிவில் ஏன் அவர்கள் இணைந்து கொள்ளவில்லை என்பது ஒரு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

வடக்கு-கிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! குற்றஞ்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர் | Tna In Deal Politics Inpoli North East Sri Lanka

எனவே இவ்வாறானவர்கள் நாவிதன்வெளி பிரதேசம் அபிவிருத்தி அடைய கூடாது என்பதற்காகத்தான் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தவிசாளர் பதவி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக இந்த சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளார்கள். என்பதை நாங்கள் இவ்விடத்தில் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மேலும் நாவிதன்வெளி பிரதேச சபை ஆட்சியமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி முனாபிக் தனமாக நடந்து கொண்டார்கள்.

மட்டுமின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் நாவிதன்வெளிக்கு முஸ்லிம் ஒருவர் உப தவிசாளராக வருவதை தடுத்து இப்பிரதேச முஸ்லிங்களுக்கு அநியாயம் செய்து முனாபிக்குகளாக நடந்து கொண்டார்கள் என குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US