புடினை போல் உலா வரும் போலி நபர் - உக்ரைன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை போல் உருவம் கொண்ட போலி நபர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தியை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எனினும், புடினை போன்று உருவம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றது. இது குறித்த தகவலை உக்ரைனின் உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உக்ரைனின் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் கருத்து வெளியிடுகையில், புடினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன. அவரது புகைப் படங்களில் ஒவ்வொன்றிலும் காதுகள் வித்தியாசமானதாக இருக்கிறது.
ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது. அது ஒரு கைரேகை போன்றது. அதை மீண்டும் செய்ய முடியாது. புடினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள்.
புடினின் போலி நபர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
சமீப காலங்களில், புடின் பொது வெளியில் தோன்றிய போது வெவ்வேறான பழக்க வழங்கங்கள், வித்தியாசமான நடத்தைகள், வித்தியாசமான நடைகள், நன்கு கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு உயரங்களை காணலாம்.
கடந்த மாதம் ஈரானுக்கு சென்ற புடின் ஜனாதிபதி மற்றும் துருக்கி ஜனாதிபதியை சந்திக்க புடினின் போலி நபர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ஈரானின் தெக்ரானில், புடின் விமானத்தில் இருந்து கீழே இறங்குவதை பாருங்கள். அது புடினா? என்பதை பாருங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, புடினின் கை, கால்களில் நடுக்கம் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பு