மறைந்த நடிகர் விவேக்கிற்கு வவுனியாவில் அஞ்சலியும், மரம் நடுகையும் இடம்பெற்றுள்ளது
வவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு மறைந்த நடிகர் விவேக்கின் ஆத்மசாந்தி நிகழ்வும், மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் இன்று (18.04.2021) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிராம சேவையாளர் சர்வேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மறைந்த நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரம் நடுவோம் எனும் பெருங்கனவினை நனவாக்கும் முகமாக மரம் நடுகை செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மரக்காரம்பளை கிராம சேவகர் நா. ஸ்ரீதரன், தமிழ் விருட்சம்
அமைப்பின் தலைவர் சந்திரகுமார், மற்றும் சமூக ஆர்வலர்கள், சுயாதீன இளைஞர்கள்
அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.












இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri