பொருளாதார மீட்சிக்கான தொலைநோக்கு அறிக்கை! எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான தொலைநோக்கு அறிக்கையொன்றை (vision paper)தயாரிப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கவனம் செலுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு கூடுதல் தீர்வை வரி விதித்த போது அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
பொருளாதார நெருக்கடிகள்
அதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளக் கூடிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றில் இருந்து மீட்சி பெறுவதற்கான வழிகள் குறித்த தொலைநோக்கு அறிக்கையொன்றை உருவாக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமன்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 12 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam